தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி-வவுனியா கல்லாற்றுப்பாலத்தில் சம்பவம்.
மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறு பாலத்தில் ஏறி தங்களது தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது தலைமன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (5) காலை கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இளைஞன் பாலத்தின் கீழே பாய்ந்து உயிர் தப்பியுள்ளார்.
சம்பவத்தில் முருங்கன் பரிகாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா (வயது-21) என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
.
.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி-வவுனியா கல்லாற்றுப்பாலத்தில் சம்பவம்.
Reviewed by Author
on
November 05, 2021
Rating:
No comments:
Post a Comment