66 பேருக்கு Zika Virus வைரஸ்
மொத்தம் 45 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் சீகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகலில் கடிக்கக்கூடிய எய்டஸ் வகை கொசுக்களால் சீகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.
வெப்ப வலயங்கள் மற்றும் துணை வெப்ப வலய பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் சீகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947 இல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.
பின்னர் 1952 இல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007 க்கு பிறகு தொற்று நோயாக உருவெடுத்தது. 2015 இல் பிரேசிலில் பல முறை இந்த தொற்று பரவியது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது. தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் நுளம்புகள் மூலம் இந்த வைரஸூம் பரவுகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு லேசான காய்ச்சல், தோல் தடிமன், தசை - மூட்டு வலி, கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு மூளை மற்றும் நரம்பு கோளாறுகளும் ஏற்படும்.
ஆனால் பெரும்பாலும் தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது. தொற்று பரப்பும் நுளம்பு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இது ஒரு வாரம் வரை நீடிக்கும்.
அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.
இந்த வைரஸூக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் ஆய்வு கட்டத்திலேயே உள்ளன. எனவே கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதே வைரஸை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.
66 பேருக்கு Zika Virus வைரஸ்
Reviewed by Author
on
November 06, 2021
Rating:

No comments:
Post a Comment