சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னாரில் ஆரம்பித்து வைப்பு.
முன்மொழியப்பட்ட திட்டங்களுக்காக மீன்பிடி அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு 26 பயனாளிகளுக்கான காசோலைகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக பாசி வளர்ப்பு , மீன் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 443 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (6) முதற்கட்டமாக 26 பயணாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
-மேலும் இயற்கை மரணமடைந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவருக்கான காப்புறுதிக் காசோலைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
அதனடிப்படையில், இயற்கை மரணமடைந்த கடற்றொழிலாளர்களான ஏ.ஜே.எம். நிஜாம் மற்றும் கே.திருச்செல்வம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 250,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
சமுர்த்தி பயனாளிகளை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னாரில் ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
November 06, 2021
Rating:

No comments:
Post a Comment