மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி அதிபர் ப.பாலபவன்,மற்றும் விருந்தினர்களாக மன்னார் கல்வி வலய இந்து சமய ஆசிரிய ஆலோசகர் ச.றமேஸ்,மன்னார் மாவட்டச் செயலக கலாசார உத்தியோகத்தர் .இ. நித்தியானந்தன் உற்பட அறநெறி பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்ற தோடு, மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதன் போது மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறிப்பாக நாவலர் விருது,கலாநிதி மனோகர குருக்கள் நினைவு விருது,இறைபணியாளர்கள் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நாவலர் விழாவும் 199 வது ஜனன தின நிகழ்வும்.
Reviewed by Author
on
December 18, 2021
Rating:

No comments:
Post a Comment