சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு புதிய Valve பொருத்த நடவடிக்கை
இந்த கலந்துரையாடலில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம், சுங்கப் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் புதிய வேல்வுகளை பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாகவே, தற்போது சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விரைவில் விநியோகிக்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, இரண்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை பரிசோதிக்க இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் வழிமுறைகள் குறித்தும் நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு புதிய Valve பொருத்த நடவடிக்கை
Reviewed by Author
on
December 30, 2021
Rating:
No comments:
Post a Comment