சொந்தக் காலில் போராடும் பெண்
தனது பத்தாவது வயதிலே தாயின் வழிகாட்டலில் பன்னை வேலையை அப்போதிருந்த பன்னைத் தொழிற்சாலையிலே கற்றது இப்போது அவரது குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக 13 வருடமாக
இத் தொழிலை மேற்கொண்டு வருகின்றார்.
வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நான் சிறுவயதில் கற்றுக் கொண்ட பன்னை வேலை தான் எனக்கு கைகொடுத்தது. அதுதான் இன்று வரை என்னை தலை நிமிர்ந்து
வாழ வைக்கிறது என்று பெருமையுடன் கூறுகின்றார் தயாரஞ்சினி.
இவர் சாதாரண கல்வித் தகைமையுடன் தனது கல்வியை முடித்துக் கொண்டார்.
1 பனையோலைச் சார்பானது 50 ரூபாய்க்கு கொள்வனவு செய்தால் அதில் 10 இடியப்பத்தட்டும் 4 நீத்துப்பெட்டியும் தான் செய்ய முடியும். தற்காலத்தில் ஈர்க்கின் விலையும் அதிகரித்ததால்
இத் தொழிலில் இலாபம் என்பது குறைவாகவே உள்ளது என்றார்.
சாதாரணமாகத் தனித்து வாழும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டித் தான் இருக்கிறது. இவ்வாறான குடும்பச் சூழலில் எனது மூத்தமகள் உயர்தரத்திலும் இரண்டாவது மகள்
சாதாரண தரத்திலும் மற்றும் மூன்றாவது மகன் தரம் நான்கிலும் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பன்னைத் தொழில் தான் செய்வது மாத்திரமன்றி ஊரிலுள்ள சில பேருக்கும் பயிற்றுவித்துள்ளார். அது மட்டுமன்றி கடந்த வருடம் பிரதேச சபையில் மகளிர் அங்கத்தவராகவும் இருப்பதோடு
அவர் கிராமசக்தி என்ற நிகழ்ச்சித் திட்டத்தில் தனது பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்துள்ளார். உள்ளூர் கடைகளில் தான் விற்பனையை மேற்கொள்வதோடு வெளியூர் கடைகளில்
சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே வெளியூர் கடைகளிலும் தமது பொருட்களைப் விற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கிடைத்த வருமானத்தில் நாளாந்த ஐPவனோபாயத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கிறது. இப்பன்னை வேலை மாத்திரமன்றி கடந்த 6 மாதங்களாக 3 மாத தையல் கற்கையைப்
பூர்த்தி செய்து ஆடைகளையும் தைத்து கொடக்கின்றார்.
இவரது சுயதொழில் முயற்சியைப் பாராட்டி தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியினால் பெண் முயற்சியாளர் சான்றிதழும், பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் பெரும் தொற்றுக் காலத்தில் பன்னைத் தொழிலும் சரி, தையல் தொழிலும் சரி அதிக பாதிப்பினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் வருமானம் குறைந்தே காணப்பட்டது.
சவால்கள் இழந்த வாழ்க்கை வெற்றிடம் போன்றது சவால்களை கடந்து சாதனைகள் நிகழ்த்தும் பெண்கள் வாழும் உலகில் எங்கள் தயாரஞ்சினி சிறந்த எடுத்துக் காட்டு. இன்னும் பல பேரை
வாழ வைக்க இன்னும் இவர் ஆசைகள் நிறைவேறி சமூகம் கொண்டாடும் பெண்கள் தலைமைத்துவமாக அவர் மாறுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
சொந்தக் காலில் போராடும் பெண்
Reviewed by Author
on
December 09, 2021
Rating:
No comments:
Post a Comment