அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம் .

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் கிளிநொச்சி அக்கராயன் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (3) இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது. 

 கொரோனா பெருந்தொற்று காரணமாக தூர இடங்களில் இருந்து பொது வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற முடியாதவர்களும் பெண்கள், சிறுவர்கள் ,முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு குறித்த மருத்துவ சேவையை பெற்றுக் கொண்டனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ கலந்து கொண்டதோடு, கிளிநொச்சி மாவட்ட வைத்தியர்கள் இரண்டு பேர் மற்றும் தாதியர்கள் கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் , மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
                              







கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம் . Reviewed by Author on December 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.