அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தடுக்க வேண்டும் என்பதனையே வட பகுதி மீனவர்கள் எதிர் பார்க்கின்றனர்- என்.எம்.ஆலம்

நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கைகள் சீன தூதுவர் வருகைக்கு இடம் பெற்றுள்ள நிலையில் சீனத் தூதுவரின் வருகை எதனை குறிக்கின்றது? என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலம் கேள்வி எழுப்பி உள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (23) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,,, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்கள்; இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விடையம் இலங்கையை விட இந்தியாவில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பாகவும் அவர்களின் படகுகள் தொடர்பாகவும் இந்தியாவில் விவாதங்களும், தலைவர்களின் கண் மூடித்தனமான பேச்சுக்களையும் ஊடகங்கள் ஊடாக பார்த்து வருகிறோம். எல்லை தாண்டி எமது இறைமையை மீறி எமது நாட்டிற்குள் அத்துமீறி பிரவேசித்த பல நூற்றுக்கணக்கான படகுகளில் சுமார் 10 படகுகள் மட்டுமே கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த படகுகளில் இருந்த 63 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆனால் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த படகுகளின் எண்ணிக்கை 500 இற்கும் அதிகம். இந்திய மீனவர்கள் இல்லது இந்தியாவில் உள்ள மக்கள் எல்லை தாண்டும் போது இலங்கை எல்லை என்பது இந்தியாவிற்குச் சொந்தம் என அவர்கள் நினைக்கிறார்கள். -பாகிஸ்தான் அல்லது சீனாவின் எல்லையை இவர்களினால் தாண்ட முடியுமா?. சட்ட விரோதமான தொழிலை செய்து கொண்டு அதை நியாயப்படுத்தி அதனை மக்கள் அவையிலும், நாடாளுமன்றத்திலும் தலைவர்கள் வாதாடுவது என்ன வகையில் பொருத்தமானது என்பது எமக்கு தெரியவில்லை. 

 ஒரு இறைமையுள்ள நாட்டின் மீது அத்துமீறி அந்த நாட்டிற்குள் சென்று இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதனை அவர்களும் கண்டித்திருக்க வேண்டும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஒரு கருத்தை முன் வைத்திருந்தார்.கைது செய்யப்பட்ட இந்திய இழுவைப்படகுகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மீன்களை பார்க்கின்ற போது அதில் சிறு மீன்கள் உட்பட ஏனைய கடல் உயிரினங்கள் அழிக்கப்படுவதை அவதானித்ததாக கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.நாங்கள் இப்போது அல்ல பல வருடங்களுக்கு முன்பு இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். இந்திய இழுவைப்படகுகளும்,, உள்ளூர் இழுவைப்படகுகளும், மேற்கொள்கின்ற இந்த தொழில் முறையினால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றது. முற்றிலும் கடல் வளத்தை அழிக்கும் நோக்குடன் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 குறிப்பாக நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத கைது நடவடிக்கைகள் அண்மையில் வருகை தந்த சீன தூதுவர் வருகைக்கு பின்னரே இந்த கைது இடம் பெற்றுள்ளது.அவரின் வருகை எதை குறிக்கின்றது?,என்று தெரியவில்லை. இந்திய மீனவர்களை கைது செய்து பின்னர் அவர்களை விடுதலை செய்து இந்தியாவை சாந்தப்படுத்துவதற்கான நடவடிக்கையா?அல்லது மீனவர்களை கைது செய்து சீனா வை சாந்தப்படுத்துவதற்கான நடவடிக்கையா? அல்லது கைதின் மூலம் வட பகுதி மீனவர்களுக்கு என்ன செய்தியை இந்த அரசு கூற விரும்புகிறது. இக் கைதுகாளுக்கான உண்மை நிலை எதிர் காலத்தில் தெரிய வரும். இந்திய மீனவர்களின் அத்துமீறளை தடுக்க வேண்டும் என்பதனையே வட பகுதி மீனவர்கள் எதிர் பார்க்கின்றனர். 

 இந்திய மீனவர்களின் சட்டவிரோத தொழில் நடவடிக்கையை தடுத்தால் எமது மீனவர்களும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை நிறுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய மீனவர்களின் வருகை முழுமையாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.அவ்வாறு அத்துமீறி வருகின்றவர் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். -மேலும் அண்மையில் வருகை தந்த சீனத் தூதுவர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். வருகை தந்த சீன தூதுவர் சில அமைப்புகளை அழைத்து அவர்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதில் மீனவர் சார்ந்த எந்த அமைப்புக்களும் கலந்து கொள்ளவில்லை. 

கடற்றொழில் திணைக்களமும் சம்மந்தப்படாத வேளையில் வெறுமனே வெளிநாட்டு தூதுவர் வருகை தந்து இவ்வாறான பொருட்களை மீனவர்களுக்கு வழங்கியதன் காரணம் என்ன? என்று இன்று வரை தெரியாத புதிராக உள்ளது. குறித்த பொதி உலர் உணவாக காணப்படுகின்றது.மன்னார் மாவட்டத்திற்கு 600 பொதிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. சீனத் தூதுவர் எதை எதிர்பார்த்து எமது மீனவர்களுக்கு வழங்குகிறார் என்று தெரியவில்லை.மன்னார் மாவட்டத்தில் 40 மீனவ சங்கங்கள் பதிவில் உள்ளது. 600 பொதிகளை எவ்வாறு பங்கிட்டு வழங்குவது? என அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை மன்னார் மாவட்ட பிரதேச மீனவ கூட்டுறவு சங்கங்களின் தலைவர் ஜே.யோகராஜ் குரூஸ் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
                 


இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தடுக்க வேண்டும் என்பதனையே வட பகுதி மீனவர்கள் எதிர் பார்க்கின்றனர்- என்.எம்.ஆலம் Reviewed by Author on December 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.