அண்மைய செய்திகள்

recent
-

அந்நிய சக்திகளால் அழிவின் விளிம்பில் இலங்கை மீனவர்கள்.....

எகிறும் விலைவாசியும் பொருள் தட்டுப்பாடுகளும் சாதாரண வாழ்விற்கான பொருளாதார ரீதியான வடிகால்களைமூடிவிடும் நிலையில் சீனர்களின் திட்டத்தின் அடிப்படையில் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமிக்கும்கடலட்டை வளர்ப்பு பாரம்பரிய தொழில்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. இலங்கை மீனவர்களுக்கான தொழில்வாய்ப்பையும் வருமானத்தைம் வழங்கும் தொழில் நடவடிக்கை என்னும்மாய நம்பிக்கையின் அடிப்படையில் இலங்கை மீனவர்களை உள்வாங்கி தனிநபர்களுக்குகடலட்டைப்பண்ணை அமைப்பதற்கு குறிப்பட்ட அளவு கடற்பரப்பை வழங்கிவரும் நிலையில் இதனைக்காரணமாக கொண்டு ஒரு சில பகுதிகளில் சீன உற்பத்தி நிறுவனங்களுக்கும் கணிசமான அளவு கடற்பரப்புவழங்கப்பட்டடுள்ளது.

 அரியாலைப் பகுதியில் சீன உற்பத்தி நிறுவனம் தனது உற்பத்தி நடலடிக்கைகளை மேற்கொண்டு வருவதுகுறிப்பிடத்தக்க விடயமாகும். மேலோட்டமான பார்வையில் இலங்கை மீனவர்கள் கடலட்டை உற்பத்தியில்ஈடுபட்டாலும் கூட ஏற்றுமதிக்கான உற்பத்தி என்ற போர்வையில் மறைமுகமாக சீன உணவு உற்பத்திக்கானதளமாக இலங்கை கடற்பரப்பு மாற்றப்படுகிறது என்பது வருந்துதற்குரிய விடயமாகும். 

 அதிக இலாபம் ஈட்டக் கூடிய இந்த திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை, அல்லைப்பிட்டி, குருநகர், மண்டைதீவு மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர்பிரிவில் கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா, இரணதீவு ஆகிய பகுதிகளிலும் மற்றும்பல பகுரிகளிலும் இந்தப் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக இப் பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டிங்கு உட்பட்ட அதிகமான மீனவர்கள் இத் தொழில்நடவடிக்கை மீதுள்ள அதீத நம்பிக்கையால் தமது தகுதிக்கு மீறிய அளவில் கடன்களை பெற்று அத் தொழில்நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பல தசாப்தங்களாக போரினால் பாதிக்கப்பட் மக்களை கொரோனா பெருந்தொற்று ஒரு புறம்அழுத்த நாட்டில் ஏற்படுகின்ற விலை அதிகரிப்புக்கள் சுமைக்கு மேல் சுமையாக வருகின்ற நிலையில் மக்கள்மேல் அட்டைப்பண்ணை என்னும் பெயரில் மீண்டும் ஒரு மறைமுக சுமை சுமத்தப்பட்டுக் கொண்டேஇருக்கிறது. 

 சொந்த மண்ணில் தமது சுய உழைப்பில் வாழ்ந்த கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கனைஅட்டைப்பண்ணை முதலாளிகளின் கூலி தொழிலாளினளாக மாற்றி விட்டது இந்த கடலட்டை வளர்ப்பு. கரையோரப் பகுதிகளில் இருந்த வருமாக மார்க்கங்கள் சிதைக்கப்பட்டு விட்ட நிலையில் தமது கடலில்மீன்பிடியில் ஈடுபட முடியாமல் கூலி தொழிலாளிகளாக மாறி வருகின்றனர் மீனவர்கள்.

 அதீத இலாபம் தரக்கூடிய தொழில் என்ற மாயையை உருவாக்கி மீனவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில்கடல்பரப்பை வழங்குவதன் மூலம் சிறு தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள்பாழாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம்சிதைக்கப்பட்டு விட்டது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் அரியாலை பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொதாரிமுனைபகுதியிலும் சீன உற்பத்தி நிறுவனங்களினால் கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கானஅட்டைப்பண்ணை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது இலங்கை மீனவர்களுக்கு கடலட்டை வளர்ப்பிற்காக வழங்கப்படும் நிலப்பரப்புக்கள் எதிர்கால சீனகடற்பரப்பு ஆக்கிரமிப்பிற்கான அத்திவாரம் என்று கூட கூறலாம். இவ்வாறு கரையோர கடற்பரப்பு சீனாவால் சுரண்டப்பட ஆழ்கடல் பரப்பு இந்திய மீனவர்களின் வருகையால்சுரண்டப்படுகிறது.

 இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் வருகையால் இலங்கை முழுவதும்அண்ணளவாக 25 சதவீத மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர கூறுகையில் இலங்கை அரசால் இந்தியமீனவர்கள் இலங்கை கடல் எல்லைககுள் வருவதற்கு எந்த அனுமதியும் வழற்கப்படாத நிலையில்சட்டவிரோதமாக நுளைவோருக்கு எதிராக கைதுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ள சூழலில் குறிப்பாக வடக்குகிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் படகுகளைஉடைப்பதுடன் கடல் வளத்தை அழிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கடல் எல்லைகள் கற்பனையால் வரையறுக்கப்பட்டதாககாணப்படுகிறது. 

இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமானஇழுவைபடகுகளை பயன்படுத்துவதன் ஊடாக தமது கடற்பரப்பையும் இலங்கை கடற்பரப்பையும் சேதப்படுத்திவருகின்றனர். குறிப்பாக மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்கள் அதிகமாக உற்ப்தியாகும் இடமாக உள்ள பவளப்பாறைகள்இந்திய இழுவைப்படகுகளால் அதிகமாக அழிக்கப்படுகின்றன. யாழ் நெடுந்தீவுப் பகுதியில் எல்லைதாண்டிய இந்திய மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளால் கடந்த நவம்பர்மாதம் 2 கோடியே 49 இலட்சத்து 79 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நெடுந்தீவு கடற்தொழிலாளர்கூட்டுறவு சமாசத்தால் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடல்வளம் மட்டுமல்லாது படகுகள், வலைகள் என்பனவும்சேதமாக்கப்படுகின்றன. 

 இலங்கை மக்களின் அன்றாட வாழ்வாதாரப் போராட்டத்திற்கு மத்தியில் அந்நிய நாடுகளின் இந்த ஆக்கிரமிப்புஇலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலை செம்மையாக செய்கின்றன. ஆழ்கடல் பகுதி இந்திய மீனவர்களாலும் கரையோரப்பகுதி சீனாவாலும் திட்டமிடப்பட்டு சுரண்டப்படும் சூழலில்இலங்கை மீனவர்களின் எதிர்கால தொழில். நடவடிக்கையை சவாலுக்குரிய விடயமாக மாற்றி விட்டது. எதிர்கால மீனவர்களின் வாழ்வாதாரம் இந்த அந்நிய சக்திகளால் இழுபறியாக மாற்றப்பட்டுள்ளது. ​​​​​​​​ 

 எ.அன்ரனற் ஜீவிதா
 ​​​​​​​ஊடக கற்கைகள் துறை,
 ​​​​​​​​4ம் வருடம். 




அந்நிய சக்திகளால் அழிவின் விளிம்பில் இலங்கை மீனவர்கள்..... Reviewed by Author on December 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.