அண்மைய செய்திகள்

recent
-

வாகன விபத்துக்களில் 06 பேர் உயிரிழப்பு

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். கிரிபேவ, புளத்சிங்கள, கம்பஹா, தம்புள்ளை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அக்கரைப்பற்று – கல்முனை வீதியின் அட்டாளைச்சேனை பகுதியில் கெப் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. தம்மென்னாவ – மெதகம வீதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். புளத்சிங்கள – தவட்டகஹ வீதி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியிலிருந்து விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 46 வயது ஒருவர் மரணித்துள்ளார்.

 கம்பஹா – மொரெபொல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் 33 வயதான ஒருவர் மரணித்துள்ளார். தம்புள்ளை – அட்டமுல சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே, இன்று (29) அதிகாலை பிலியந்தலை – போகுந்தர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு ஜீப் வண்டியை செலுத்திய பெண்ணொருவர் நித்திரை கலக்கத்தில் வீதியில் பயணித்த ஒருவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய 52 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன விபத்துக்களில் 06 பேர் உயிரிழப்பு Reviewed by Author on December 29, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.