மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்திற்கு சூழல் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,டெங்கு ஒழிப்பு செயலணி, உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்
அதே நேரம் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிபணிமனை மற்றும் வைத்திய சாலை பகுதிகளை சூழ உள்ள பகுதிகள் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் இவ்வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
Reviewed by Author
on
January 04, 2022
Rating:
No comments:
Post a Comment