அண்மைய செய்திகள்

recent
-

கடலுக்குள் இருந்து வெளியே தென்படும் இயந்திர பாகங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந் நிலையில், நேற்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

 உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடலுக்குள் இருந்து வெளியே தென்படும் இயந்திர பாகங்கள்! Reviewed by Author on January 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.