சொய்சாபுர தொடர்மாடிக் குடியிருப்பில் தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு
19 வயது இளைஞரே தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று பகல் வேளையில், வீட்டில் தீ பற்றியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக மொறட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோனைகள் மற்றும் நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சொய்சாபுர தொடர்மாடிக் குடியிருப்பில் தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 09, 2022
Rating:
No comments:
Post a Comment