மன்னாரில் இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட ஒரு லட்சம் கிலோ பூசணி மற்றும் தர்பூசணி அறுவடை
மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொண்டைச்சி பகுதியில் இலங்கை கஜூ கூட்டுத்தாபனத்தால் இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட தர்பூசனி, பூசனி மற்றும் கெக்கரிக்காய் பயிர்செய்கையின் அறுவடை இன்றையதினம் வியாழக்கிழமை கொண்டச்சி கஜூ பண்னையில் இடம் பெற்றது
இலங்கை கஜூ கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி சாரங்க ரத்னனாயக்கா மற்றும் கஜூ கூட்டுத்தாபன அதிகாரிகள் இணைந்து குறிப்பட்ட அறுவடை செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர் கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயிற்செய்கையானது முற்று முழுதாக இயற்கையான முறையில் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் இன்றையதினம் அறுவடை செய்யப்பட்டுள்ளது இலங்கை கஜூ கூட்டுதாபனத்திற்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தின் மேற்படி பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த அறுவடையில் ஒரு லட்சம் கிலோ மதிப்பிடக்கூடிய பூசணிக்காய்களும் இருபத்தையாயிரம் கிலோ அளவுடைய தற்பூசணிகளும் முப்பதாயிரம் கிலோ கெக்கரிக்காயும் அறுவடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னாரில் இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட ஒரு லட்சம் கிலோ பூசணி மற்றும் தர்பூசணி அறுவடை
Reviewed by Author
on
January 27, 2022
Rating:

No comments:
Post a Comment