மகிந்தவை நீக்கிவிட்டு என்னை பிரதமராக்க வேண்டும் - பசில் அரசாங்கத்திற்குள் பிரசாரம்
அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பசில் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்து வருகின்றார்.
பசில் சில அமைச்சரவை பதவிகளில் மாற்ற்ஙகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் கூடிய விரைவில் இடம்பெறவுள்ளன.
இராஜாங்க அமைச்சர்களிற்கு மேலதிக பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர்களின் கீழ் வரும் திணைக்களங்களில் மாற்றங்கள் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய நிர்வாக அதிகாரிகளின் பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் ஜனாதிபதியின் செயலாளர் பிபிஜயசுந்தரவின் பதவியில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பி.பி. ஜயசுந்தர 31 ம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்கின்றார்.
பி.பி. ஜயசுந்தரவை ஜனாதிபதி நிதியமைச்சின் ஆலோசகராக நியமிக்கலாம் அவர் அதனை ஏற்றுக்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல், பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வைக் காண்பதற்காக தற்போதைய முழு அமைப்பு முறையிலும் மாற்றங்கள் செய்யப்படலாம்,என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்தவை நீக்கிவிட்டு என்னை பிரதமராக்க வேண்டும் - பசில் அரசாங்கத்திற்குள் பிரசாரம்
Reviewed by Author
on
January 03, 2022
Rating:
No comments:
Post a Comment