கனடாவில் பாதுகாப்பு படையில் சாதனை படைத்த தமிழன்
இவ்வாறான கனடிய அரச சார்ந்த கௌரவத்தைப் பெற்ற வாகீசன் மதியாபரணம் அவர்கள் கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஒரு சிரேஷ்ட நிதியியல் சேவைகள் நிர்வாகியாக பணியாற்றி தற்போது மனிடோபாவில் முது நிலை நிதியியல் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.
வாகீசன் மதியாபரணம் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவாக்கிய மாணவச் செல்வங்களில் சிறப்புகள் நிறைந்த மாணவராக கல்வி கற்ற 1983 தொடக்கம் 1988 வரையிலான காலப்பகுதியில் விளங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1986 தொடக்கம் 1988 வரையிலான காலப்பகுதியில் அவர் கல்லூரியின் மாணவத் தலைவராகவும்,அத்துடன் கல்லூரியின் உதைபந்தாட்டக் அணியின் மூன்று பிரிவுகளிலும் அங்கம் வகித்து பல போட்டிகளில் வெற்றிகளை ஈட்டுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.
அத்துடன் யாழ். இந்துக் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியிலும் பங்கெடுத்துள்ளார். 1987ல் கல்லூரியின் வர்த்தக மன்றத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார். அத்துடன் சாரணர் அணியையும் அலங்கரித்துள்ளார்.
பின்னர் 1988ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த வாகீசன், கனடிய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்று 1995ஆம் ஆண்டு கனடிய இராணுவத்தில் இணைந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியான காலப் பகுதியில் கனடாவின் பாதுகாப்புப் படையின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும்,நேட்டோ நாடுகளின் சமாதானப் படையிலும் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டார்.
இவர் எமது தாயகத்தில் பொருளாதார கஷ்டங்களால் தமது கல்வியை சிறந்த முறையில் தொடர முடியாமல் உள்ள தமிழ் மாணவர்களின் நலன் கருதி, ‘தமிழ் மாணவர்கள் உதவித் திட்டம்’ (Tamil Students Assistance) என்னும் அமைப்பை சில நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்து தொடர்ந்து இந்த நற்பணியை ஆற்றி வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடாவில் பாதுகாப்பு படையில் சாதனை படைத்த தமிழன்
Reviewed by Author
on
January 25, 2022
Rating:
No comments:
Post a Comment