அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தாழிறங்கியுள்ளது : வீதியால் பயணிப்பவர்கள் அவதானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வீதியின் முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒருபகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதாரமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் தொடர்சியாக கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தினை புனரமைக்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட ஊடகப் பிரிவு, 
மாவட்ட செயலகம், 
முல்லைத்தீவு.




முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தாழிறங்கியுள்ளது : வீதியால் பயணிப்பவர்கள் அவதானம்! Reviewed by Author on January 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.