அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்ச்சியால் கிளிநொச்சியில் மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
கிளிநொச்சியில் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில், கடந்த ஆண்டுகளில் பொது மக்களினால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட போதிலும் யுத்தம் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படாத நிலையில் காடுகளாக மாறிய காணிகள் – கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை – அபிவிருத்தி பணிகளுக்காக கோரப்பட்ட காணிகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் என்று சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொடர்பாக இன்று பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்
வேண்டுகோளுக்கு அமைய, துறைசார் அமைச்சர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கிளிநொச்சிக்கு வருகை தந்த வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சம்மந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
இதையடுத்து, கருத்து தெரிவித்த வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், வனங்களின் பாதுகாப்பிற்கும் வன ஜீவராசிகளின் வாழ்விற்கும் அச்சுறுத்தலற்ற காணிகளை, பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு முடியும் எனத் தெரிவித்தனர்.
இந் நிலையில் பூநகரி பிரதேச ஜெயபுரம் கிராம அலுவலர் பிரிவில் திக்குவில் பிரதேசத்தில் 120 ஏக்கரும்,பல்லவராயன்கட்டு கிராம அலுவலர் பிரிவில் கரியாலை நாகபடுவான் குளத்தை அண்டிய 120 ஏக்கர் விவசாய காணியும், ஜெயபுரம் பண்டிவெட்டி பண்ணை போன்றனவும் விடுவிக்க வனவள திணைக்களத்தால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 450 ஏக்கர் காணிகளை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பது சம்பந்தமாக பரிசீலனை செய்து சாதகமான முடிவை தருவதாகவும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி மக்களது நீண்டகால தொடர் பிரச்சனையாக நிலவி வந்நத காணி விடுவிப்பு சம்பந்தமான பிரச்சனைக்கு இன்று கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்ச்சியால் சாதகமான சூழல் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களுக்கான களவிஜயம் மேற்கொண்ட வனவள திணைக்களத்தின் வனாதிபதி மற்றும் அவரது பிரதிநிதிகள்,மாவட்ட வனவள அதிகாரி, உதவிமாவட்ட வனவள அதிகாரி மற்றும் காணி உத்தியோகஸ்தர் முரளிநாத் செந்தூரன் ஆகியோருடன் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், கிளிநொச்சி மாவட்ட கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன் சார்பாக அவரது பிரதிநிதி றுஸாங்கன் ஆகியோரும் ஜெயபுரம் கிராம திக்குவில் மற்றும் பல்லவராயன் கட்டு பகுதிகளுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு எல்லையிடப்பட்ட காணிவிடுவிப்பு சம்பந்தமாக ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்ச்சியால் கிளிநொச்சியில் மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பு!
Reviewed by Author
on
January 09, 2022
Rating:
No comments:
Post a Comment