சிவராத்திரி நெருங்கும் சமயத்தில் திருக்கேதீச்சர நுழைவு பகுதிக்கு அருகில் மீண்டும் ஒரு மாதா சிலை -திருக்கேதீச்சர நிர்வாகம் பொலிசில் முறைப்பாடு
2022 ஆண்டுக்கான சிவராத்திரி நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்ற நிலையில் மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீச்சரம் கோவிலுக்கு செல்லும் பகுதியில் லூர்த்து அன்னை வளாகத்தில் திடீர் என மாத சிலை ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை சைவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே குறித்த பகுதியில் 2019 ஆண்டு சிவராத்திரி காலத்தில் சைவ மக்களால் அலங்கார வளைவு ஒன்று வைக்க முற்பட்ட சமயமே அது கிருஸ்தவ மக்களால் உடைக்கப்பட்டு பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்று தற்போது குறித்த வழக்கு மன்னார் நீதி மன்றத்தில் இடம் பெற்று வருகின்றது
அதே நேரம் லூர்த்து அன்னை ஆலய காணி தொடர்பான வழக்கும் கொழும்பு மேல் நீதி மன்றத்தில் இடம் பெற்று வருகின்றது இந்த நிலையிலேயே வளைவு பிரச்சினை ஏற்பட்ட வீதி பகுதியின் அருகில் குறித்த லூர்த்து அன்னையின் சிலை வைக்கப்பட்டது சைவ மக்களை மனவேதனை அடைய செய்துள்ளது
உலக வாழ் சைவ மக்களால் போற்றப்படும் பாடல் பெற்ற தலமாக கருதப்படும் திருக்கேதீச்சர ஆலயம் வரலாற்று சிறப்பும் தொண்மையும் மிக்க ஆலயங்களில் ஒன்று ஆகும்
சிவராத்திரி தினம் அன்று இலங்கை மாத்திரம் இன்றி உலக நாடுகள் முழுவதிலும் சைவ மக்கள் தீர்த்த யாத்திரை உட்பட பல வேண்டுதல்களை முன்னிட்டு திருக்கேதீச்சரத்திற்கு வருவது வழமை
நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயம் மற்றும் லூர்த்து அண்னை ஆலயம் தொடர்பாக முரண்பாடுகள் இடம் பெற்றுவந்த நிலையில் நல்லிணக்க அடிப்படையில் இரு சாராரும் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு செயற்படுத்தி வந்தனர் இருப்பினும் தொடர்சியாக ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளில் ஒரு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையிலே லூர்த்து அன்னை ஆலய திருவிழா நேற்றைய தினம் இடம் பெற்ற நிலையிலேயே அவசர அவசரமாக குறித்த சிலை திறக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்
லூர்த்து அன்னை வளாகத்தை சூழ போதிய அளவு காணி காணப்படுகின்ற போதிலும் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு நுழையும் பகுதியில் சிலை அமைக்கப்பட்டு மதில் சுவர்களும் இடிக்கப்பட்டு சிலை திறக்கப்பட்டுள்ளமை பல தரப்ப்பட்டவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
பல தரப்பட்ட விட்டு கொடுப்புக்கள் மத்தியில் திருக்கேதீச்சர வளைவு பிரச்சினை சுமூகமான நிலையில் கொண்டு செல்லப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மத முரண்பாட்டை தோற்றுவிப்பதாக தெரிவித்து திருக்கேதீச்சர திருப்பணி சபையினர் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்
அதே நேரம் குறித்த சிலை திறப்பு விவகாரம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரியப்படுத்தியும் அவர் காத்திரமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் திருக்கேதீச்சர நிர்வாகத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்
மஹா சிவராத்திரி தினம் நெருங்கும் சமயத்தில் இவ்வாறன செயற்பாடுகளை தவிர்க்குமாறும் நீதி மன்றத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து செயற்படுமாறும் அதை விடுத்து நல்லிணக்கத்த சிதைக்கும் செயற்பாடுகளை தவிர்க்குமாறும் மன்னார் சைவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
No comments:
Post a Comment