மன்னாரில் பூஸ்ரர் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான சினோபாம் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி அதே நேரம் இரண்டு தடுப்பூசிகளை பெற்று மூன்று மாதம் நிறைவடைந்தவர்களுக்கான மூன்றாவது பூஸ்ரர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் T.வினோதன் தலைமையில் இராணுவத்தினரின் நெறிப்படுத்தலில் இன்று வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை,ஓகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டொஸ்களை பெற்றவர்களுக்கும் அதே நேரம் தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளே மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக மன்னார் பேரூந்து நிலையத்திலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
அதன் அடிப்படையில் இரானுவத்தினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகளை பெற்றுவருகின்றனர்
மன்னார் நகர் நிருபர்
11-02-2022
No comments:
Post a Comment