அண்மைய செய்திகள்

recent
-

புட்டின் அணுவாயுதத்தை பயன்படுத்துவாரா?

ஒரு விடயத்தை நான் ஏற்றுக்கொள்வதுடன் எனது கருத்தை நான் ஆரம்பிக்கின்றேன் புட்டின் அதனை செய்யமாட்டார் என நான் பலதடவை நினைத்திருந்ததுபோது அவர் அதற்கு மாறாக செயற்பட்டுள்ளார். கிரிமியாவை அவர் ரஸ்யாவுடன் ஒருபோதும் இணைத்துக்கொள்ளமாட்டார்-அவர் அதனை செய்தார். அவர் டொன்பசில் மோதலை ஆரம்பிக்க மாட்டார்- அவர் அதனை செய்தார். உக்ரைன் மீது முழுமையான இராணுவநடவடிக்கையை அவர் ஆரம்பிக்கமாட்டார் - அவர் அதனை செய்தார். அவர் செய்யமாட்டார் - என்பது புட்டினிற்கு பொருந்தாது என்பதுடன் நான் இதனை முடிக்கின்றேன். இது மிகவும் கடினமான கேள்வியொன்றை எழுப்புகின்றது. 

அவர் ஒருபோதும் அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டார் - ? இது தத்துவார்த்தமான கேள்வியில்லை. ரஷ்ய ஜனாதிபதி தனது அணுவாயுத படைப்பிரிவை தற்;போது உசார் நிலையில் வைத்துள்ளார். நேட்டோவிடமிருந்து வெளியாகும் மூர்க்கத்தன்மை மிக்க அறிக்கைகளை இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். தனது விசேட இராணுவநடவடிக்கை( உண்மையில் அது முழுமையான இராணுவநடவடிக்கை)குறித்த அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டவேளை அவர் வெளியிட்ட அச்சத்தை ஏற்படுத்தும் எச்சரிக்கையை பாருங்கள். 

எவராவது வெளியிலிருந்து தலையீடு செய்ய நினைத்தால்,நீங்கள் வரலாற்றில் எதிர்கொள்ளாத விளைவுகளை சந்தி;ப்பீர்கள் புட்டினின் சொற்கள் அணுவாயுத தாக்குதல் குறித்த நேரடி எச்சரிக்கை என தெரிவிக்கின்றார் நோபால் பரிசை பெற்ற கெசெட்டோ செய்தித்தாளின் ஆசிரியர் டிமிட்ரி முரடோவ் தனது தொலைக்காட்சி உரையில் கிரெம்ளின் தலைவராக தன்னை சித்தரிக்கவில்லை,பிரபஞ்சத்தின் தலைவராக தன்னை சித்தரிக்கின்றார்- ஆடம்பர காரின் உரிமையாளர் தனது வாகனத்தின் சாவியை காண்பிப்பது போல அவர் தனது அணுவாயுத பொத்தானை காண்பிக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ரஸ்யா என்ற ஒன்று இல்லாவிட்டால் உலகம் எதற்கு என அவர் பல தடவை தெரிவித்துள்ளார்,அவ்வேளை எவரும் இதனை கருத்தில் எடுக்கவில்லை என தெரிவிக்கும் அவர் ரஸ்யா தான் நினைத்தது போல உலக நாடுகள் நடக்காவிட்டால்,அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கின்றார் எனவும் குறிப்பிடுகின்றார். ரஸ்யாவை யாராவது அழிக்க நினைத்தால் அதற்கு பதிலளிப்பதற்கு எங்களிற்கு சட்டபூர்வமான உரிமையுள்ளது -ஆம்அது மனித குலத்திற்கும் உலகிற்கும் பேரழிவாக காணப்படும் ஆனால் நான்ரஸ்ய பிரஜை நாட்டின் தலைவர் - ரஸ்யா இல்லாத உலகம் எதற்கு என அவர் 2018 இல் வெளியான விவரணசித்திரமொன்றில் தெரிவித்திருந்தார். 2022இல் புட்டின் உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டார் ஆனால் உக்ரைன் படையினர் கடும் எதிர்ப்பை காண்பிக்கின்றனர். கிரௌம்ளினிற்கு மேற்குலகநாடுகள் கடும் ஆச்சரியத்தை அளித்துள்ளன,மொஸ்கோவை முடக்கும் நிதிபொருளாதார தடைகளை விதித்துள்ளன. புட்டினின் இருப்பிற்கு அவசியமான அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

புட்டின் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளார் என நம்புகின்றார் மொஸ்கோவை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் t Pavel Felgenhauerமேற்குலகம் ரஸ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களைமுடக்கியதும் அந்த நாட்டின் பொருளாதாரம் சிதறஆரம்பிக்கும் இதனால் அவரின் அமைப்பு முறை செயல்இழக்கும் - புட்டினிற்கு வேறு வழிகள் இல்லை,என அவர் தெரிவிக்கின்றார். ஐரோப்பாவிற்கான எரிவாயுவிநியோகத்தை துண்டிப்பது அவருக்கு உள்ள ஒரு வழி,அதன் மூலம் ஐரோப்பியர்களை இறங்கிவரச்செய்யலாம் என அவர் கருதக்கூடும் என தெரிவித்துள்ள அவர் பிரிட்டனிற்கும் டென்மார்க்கிற்கும் இடையில் உள்ள வடகடலில் அணுவாயுதத்தை வெடிக்கவைத்து என்ன நடக்கின்றது என அவர் பார்க்ககூடும் எனவும்அவர்தெரிவிக்கின்றார்.

 அணுவாயுதத்தை பயன்படுத்த புட்டின் தீர்மானித்தால் அவரை சுற்றியுள்ளவர்கள் அதனை தடுக்க முயல்வார்களா? ரஸ்யாவின் உயர் வர்க்கத்தினர் ஒருபோதும் மக்களுடன் இல்லை என தெரிவிக்கும் டிமிட்ரி முரடோவ்,அவர்கள் எப்போதும் ஆட்சியாளர்களை ஆதரிப்பார்கள் என தெரிவிக்கின்றார். உக்ரைன் யுத்தம் புட்டினின் யுத்தம்,கிரெம்ளின் தலைவர் தனது நோக்கங்களை சாதித்தால் இறைமையுள்ள நாடு என்ற உக்ரைனின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் - இதில் சந்தேகமில்லை, அவர் தான் தோற்றுக்கொண்டிருக்கின்றேன் என கருதினால் - பெரும் உயிரிழப்புகளை சந்தித்தால்-கிரெம்ளின் ஆற்றொணா நடவடிக்கைகளில் இறங்கும் என்ற
அச்சம் காணப்படுகின்றது. குறிப்பாக அவர் ஒருபோதும் அதனை செய்யமாட்டார் என்பது இனிமேலும் பொருத்தமில்லாததாக காணப்பட்டால்.

பிபிசி

புட்டின் அணுவாயுதத்தை பயன்படுத்துவாரா? Reviewed by Author on February 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.