அண்மைய செய்திகள்

recent
-

மரணங்களின் போது PCR பரிசோதனை அவசியமில்லை: புதிய சுற்றுநிருபம் வௌியீடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் COVID நோயாளர்களில் அதிகமானவர்கள் சரியான முறையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்தார். கடந்த 9 ஆம் திகதி முதல் நிறைவடைந்த 7 நாட்களில் நாட்டில் 8,614 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறித்த 7 நாட்களில் 218 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்த காலப்பகுதிக்குள் 49,128 PCR பரிசோதனைகளும் 23,619 Antigen பரிசோதனைகளும் ​மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 இதேவேளை, மரணங்களின் போது PCR பரிசோதனைகள் அவசியமில்லை என்பதற்கான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசியம் எனில், சட்டவைத்திய அதிகாரி பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் PCR பரிசோதனையினை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. COVID தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்யும் போது அல்லது அடக்கம் செய்யும் போது மேலும் தளர்வான நடைமுறையொன்றை கையாள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மரணங்களின் போது PCR பரிசோதனை அவசியமில்லை: புதிய சுற்றுநிருபம் வௌியீடு Reviewed by Author on February 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.