இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு தங்குமிடங்களையும் உணவையும் வழங்க முன்வரும் இலங்கையர்கள்
ஹோட்டல்களும் தனிநபர்களும் தற்போது இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு இலவச தங்குமிடங்களையும் உணவினையும் வழங்க முன்வந்துள்ளனர் - இதற்கான அறிவிப்பை முகநூலில் காணமுடிகின்றது.
களுத்துறையில் ஐந்து படுக்கையறைகளை கொண்டமாளிகையொன்றின் உரிமையாளர் இலவசதங்குமிடங்களையும் உணவையும் வழங்க முன்வந்துள்ளார்.
அம்பேவலவில் உள்ள பண்ணையொன்று இலங்கையி;ல சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு தங்குமிடங்களை வழங்க முன்வந்துள்ளது.
இதேபோன்ற அறிவித்தல் அறுகம்குடாவிலிருந்தும் வெளியாகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த பல தனிநபர்கள் முகப்புத்தகங்களி;ல் இலவச தங்குமிடங்கள் உணவுகளிற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு இலவச தங்குமிடங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் தனிநபர்கள் தாங்கள் விரும்பினால்அவ்வாறான உதவிகளை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிக்குண்டுள்ள உக்ரைன் பிரஜைகளிற்கு தங்குமிடங்களையும் உணவையும் வழங்க முன்வரும் இலங்கையர்கள்
Reviewed by Author
on
February 28, 2022
Rating:
No comments:
Post a Comment