அண்மைய செய்திகள்

recent
-

எழுத்துமூல உறுதிமொழி தரும்வரை போராட்டத்தை நிறுத்தோம்!

”இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்தியப் படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உறுதிமொழியை , தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலம் தரும் வரை எமது போராட்டம் தொடரும்” என வடமராட்சி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் ஊடக சந்திப்பொன்றை நேற்று நடத்தினர். அதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பினால் நமது கடல் வளம் அழிக்கப்படுவதுடன் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது உயிர்களைப் பறிக்குமளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. 

 எனவேதான் இந்த அராஜகத்துக்கு நிரந்தர முடிவு காணும் வகையில், பொன்னாலை தொடக்கம் பருத்தித்துறை வரை சாலை மறியல் போராட்டத்தையும் ,கடற்றொழில் மறிப்பு போராட்டத்தையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயமே ஒன்றிணைந்து இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.எமது போராட்டத்துக்கும், சமாசம் மற்றும், மாவட்ட சம்மேளனத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை.

மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டமானது மீனவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடரும். அதேவேளை போராட்டத்தை நடத்துவதற்கு பொதுமக்களிடம் ஆதரவு கோரி நிற்கின்றோம்.குறிப்பாக, எமது போராட்டத்துக்கு வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகள், பொது அமைப்புகள் என்பன தமது ஆதரவை வழங்க வேண்டுமென்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம் ” -என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.








எழுத்துமூல உறுதிமொழி தரும்வரை போராட்டத்தை நிறுத்தோம்! Reviewed by Author on February 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.