அண்மைய செய்திகள்

recent
-

“வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பணிகள்” செயற்திட்டம் மன்னார் வேட்டையார் முறிப்பு கிராமத்திலும் ஆரம்பித்து வைப்பு

'வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லட்சம் வேலை திட்டம்' எனும் தொனிப் பொருளிலான பாரிய அபிவிருத்தி திட்டம் இன்று வியாழக்கிழமை (3) மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பிரஜைகளினதும் வாழ்வாதாரத்தை பலப்படுத்தி நாட்டை சுபீட்சமாக மாற்றும் இந்தத் திட்டத்துக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ .100 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன் மொழிவுக்கமைய கிராமத்துக்கான வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,00,000 அபிவிருத்தித் திட்டங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிக்காட்டலின் கீழ் இன்று வியாழக்கிழமை காலை 8.52 க்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. -குறித்த நிகழ்வு மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேட்டையார் முறிப்பு கிராமத்தில் வைபவ ரீதியாக இடம் பெற்றது. 

 வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான மாதர் சங்கத்திற்கான அரைக்கும் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. நிதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கு 3 மில்லியன் ரூபாய் நிதியானது இவ்வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இதனால் கிராமத்தில் தன்னிறைவான அபிவிருத்தி ஒன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமெல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் குறித்த தேசிய நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதது.
                 






“வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் பணிகள்” செயற்திட்டம் மன்னார் வேட்டையார் முறிப்பு கிராமத்திலும் ஆரம்பித்து வைப்பு Reviewed by Author on February 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.