அண்மைய செய்திகள்

recent
-

உக்ரைன் எல்லைக்கு அருகில் டாங்கிகளையும் ஆட்டிலறிகளையும் படையினரையும் குவிக்கும் ரஷ்யா- கருடங்கடலில் நீர்மூழ்கிகள் - தரையிறங்கு கலங்கள் - சிஎன்என்

உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்யா தனது படையினரையும் ஆயுதங்களையும் தொடர்ந்து குவித்துவருவதை வீடியோக்கள் காண்பித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. கருங்கடலில் நீர்மூழ்கிகள் முதல் தரையிறக்கத்திற்கு பயன்படுத்தப்படும் கப்பல்கள் வரை காணப்படுகின்றன, உக்ரைனின் வடகிழக்கு எல்லையில் குறுகியதூர ஏவுகணைகள் வரை டாங்கிகள் வரை அனைத்தும் காணப்படுகின்றன எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ரஷ்ய படையினரின் நடவடிக்கைகள் குறித்த வீடியோக்களை ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் மேலும் பலவீடியோக்களை அவதானித்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

 மேற்குரஸ்யாவின் பெல்கொரொட் நகரிற்கு அருகில் வாகனத்தொடரணி காணப்படுகின்றது -உக்ரைனின் முக்கிய நகரான கார்கிவ்விற்கு அருகில் இந்தநகரம் காணப்படுகின்றது என சிஎன்என் தெரிவித்துள்ளது. பெல்கொரொட் பிராந்தியத்தில் படையினர் குவிக்கப்படுவதற்கான மேலும் பல ஆதாரங்கள் உள்ளன, என தெரிவித்துள்ள சிஎன்என் உக்ரைன் எல்லையிலிருந்து 15மைல் தொலைவில் உள்ள செரெட்டனோவில் டாங்கிகளின் நடமாட்டத்தை காண்பிக்கும் வீடியோக்களை அவதானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. புகையிரதங்களில் இருந்து இறக்கப்பட்ட டாங்கிகளை பயன்படுத்தி ரஷ்ய படையினர் இரவில் நகர்கின்றனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. 

என்ற நகரப்பகுதியில் பெருமளவு டாங்கிகளையும் காலாட் படை வாகனங்களையும் காண்பிக்கும் வீடியோக்கள் கிடைத்துள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது. பயணித்துக்கொண்டிருக்கும் புகையிரதத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களில் காணப்படுபவை ரஷ்யாவின் டாங்கி படைப்பிரிவின் டாங்கிகள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களில் உக்ரைன் எல்லைக்கு அருகில் பல ஹெலிக்கொப்டர்கள் வந்து சென்றுள்ளதைக் காண்பிக்கும் சமூக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. 

தாக்குதல் ஆரம்பித்தால் அவை படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும். பெல்கொரொட்டின் புறநகர் பகுதியில் உள்ள புகையிரதத்தில் டாங்கிகள்,காலாட் படை வாகனங்கள் ஆட்டிலறிகள் போன்றவற்றை காணமுடிந்துள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.







உக்ரைன் எல்லைக்கு அருகில் டாங்கிகளையும் ஆட்டிலறிகளையும் படையினரையும் குவிக்கும் ரஷ்யா- கருடங்கடலில் நீர்மூழ்கிகள் - தரையிறங்கு கலங்கள் - சிஎன்என் Reviewed by Author on February 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.