சீனாவில் இடம்பெறும்குளிர்கால ஒலிம்பிக்கின் போது தீய சைபர் தாக்குதல்கள் இடம்பெறலாம் – எவ்பிஐ எச்சரிக்கை
அமெரிக்க விளையாட்டுவீரர்கள் அனைவரும் தங்களது தனிப்பட்ட கையடக்கதொலைபேசிகளை வீட்டில்வைத்துவிட்டு வரவேண்டும் மாற்றுதொலைபேசியை பயன்படுத்தவேண்டும் என எவ்பிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது என அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு முகவர் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து வீரர்களையும் தங்கள் கையடக்க தொலைபேசிகளை வீட்டில் வைத்துவிட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது தற்காலிக தொலைபேசிகளை பயன்படுத்துங்கள் என சிஎஸ்ஐஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீங்கிழைக்கும் நோக்கத்தை கொண்ட சைபர் செயற்பாட்டாளர்கள் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பராஒலிம்பிக்கை சீர்குலைக்க பரந்த அளவிலான சைபர் செயற்பாடுகளை பயன்படுத்தலாம் என எவ்பிஐஎச்சரித்துள்ளது.
சேவைகள் துண்டிப்பு தாக்குதல்கள் ரான்சம்வெயர் மோல்வெயர்சோசியல் என்ஜினியரிங் தரவுதிருட்டு பிசிங் பிரச்சாரங்கள் இடம்பெறலாம் என சிஐஎஸ் ஏ எச்சரித்துள்ளது.
குளிர்கால ஒலிம்பிக்கிற்கு முன்னதாக உள்நாட்டில் தன்னை விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ளது இதற்காக தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி மறுத்துள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
சீனாவில் இடம்பெறும்குளிர்கால ஒலிம்பிக்கின் போது தீய சைபர் தாக்குதல்கள் இடம்பெறலாம் – எவ்பிஐ எச்சரிக்கை
Reviewed by Author
on
February 09, 2022
Rating:
No comments:
Post a Comment