உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் திட்டம்
லுகான்ஸ் பிராந்தியத்தில் செயற்படும் கிளர்ச்சிக்காரர்களும் இதேஅறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனின் கிழக்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மில்லியன் கணக்காண மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களில் அனேகமானவர்கள் ரஸ்ய மொழி பேசுபவர்கள் என்பதுடன் ரஸ்யா அவர்களிற்கு பிரஜாவுரிமை வழங்க முன்வந்துள்ளது.
இந்த எதிர்பாராத திருப்பத்தை உக்ரைன் மீதான முழுமையான தாக்குதலை நியாயப்படுத்துவதற்கான ரஸ்யாவின் நடவடிக்கை என மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன.
பல வருடங்களின் பின்னர் முதல்தடவையாக இன்றே கிழக்கு உக்ரைனில் கடுமையான ஆட்டிலறி தாக்குதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் திட்டம்
Reviewed by Author
on
February 19, 2022
Rating:

No comments:
Post a Comment