அண்மைய செய்திகள்

recent
-

உலகில் கொரோனா வைரஸ் பரவல் ஒருபோதும் ஒழியாது- எச்சரிக்கை

புதிய திரிபுகளாக உருமாறுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் உலகில் ஒருபோதும் ஒழியாமல் போகலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக நிபுணா்கள் இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்படி வைரஸ்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய தன்மைகளுடன் கூடிய அவதாரமெடுத்து தமது பரவலைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். 

இந்நிலையில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிவிட்டு, அதனை ஏராளமானவா்களுக்கு செலுத்திவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய வகை கொரோனாக்கள் உருவாவதை நாம் மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் ஒமிக்ரோன் வகை கொரோனா ஏராளமானவா்களுக்குப் பரவி, அதிக உடல்நல பாதிப்பை ஏற்படுத்தாமல் மறைந்து விடுவதால், சமூக நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிடும் என நினைப்பது தவறான கணிப்பு என ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி நிபுணா்கள் கூறியுள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸ் பரவல் ஒருபோதும் ஒழியாது- எச்சரிக்கை Reviewed by Author on February 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.