அண்மைய செய்திகள்

recent
-

கரைச்சி பிரதேச செயலக ஊழல் மற்றும் லஞ்சம் பெறும் குடியேற்ற உத்தியோகத்தர் இடமாற்றப்படுவரா?

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் குடியேற்ற உத்தியோகத்தாராக கடமையாற்றி வருவவர் சின்னத்தம்பி கருணாகரன் இவரை முன்னாள் மாகாண காணி ஆணையாளராகிய பொன்னுத்துரை குகநாதன் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் ஊழல் நடைபெறுவதாக தெரிவித்துக் குறித்த அதிகாரியை கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் குடியேற்ற உத்தியோகத்தராக நியமித்தார் அவ்வேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு காணி உத்தியோகத்தராக வர்த்தகமானியில் அறிவிக்கப்பட்ட குமரசாமி சிவகுமார் என்பவர் காணிக்கிளையின் தலமை அதிகாரியாக கடமையாற்றி கொண்டிருந்தார்.

கருணாகரனின் இலஞ்ச ஊழல் செயற்பாட்டிற்கு தடையாக இருந்த சிவகுமரை முன்னாள் மாகாண காணி ஆணையாளர் குகநாதன் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு இடமாற்றம் செய்து கருணாகரன் லஞ்சம் பெற ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது மேலும் சிவகுமார் காணி உத்தியோகத்தராக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலை வர்ததகமானி மூலம் இரத்து செய்யாது சட்டத்திற்கு முரணாக தனது கடித மூலம் இரத்து செய்தான் முன்னாள் மாகாண காணி ஆணையாளர் இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினரான கந்துவட்டி ஜீவன் மற்றும் பல அரச உத்தியோத்தர்களுக்கு கருணாகரன் சட்டத்திற்கு முரணாக காணிகளை உரிமை மாற்றம் செய்து வழங்கியுள்ளார் கருணாகரன். மேலும் இவ் அதிகாரியின் உதவியுடன் அரச அதிகாரி ஒருவர் 20 காணிகளை தன்னகத்தே கொண்டுள்ளார். 

 மேலும் காணி மோசடி தொடர்பாக கரைச்சி பிரதேச செயலாளர் திரு ஜெயகரன் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் கருணாகரன் ஆகியோருக்கு எதிராக தற்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை காணி மோசடி தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்கிளஸ் தேவனாந்தாவால் கடுமையாக பிரதேச செயலாளர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் கருணாகரன் ஆகியோர் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள் தற்பொழுது குடியேற்ற உத்தியோகத்தர் கருணாகரனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட பொழுதும் அதனை இரத்து செய்ய பலர் முயற்சி செய்வதாக அறியமுடிகின்றது.எனவே தற்போதைய மாகாண காணி ஆணையாளர் குறித்த இடமாற்றத்தை இரத்து செய்வாரா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்



கரைச்சி பிரதேச செயலக ஊழல் மற்றும் லஞ்சம் பெறும் குடியேற்ற உத்தியோகத்தர் இடமாற்றப்படுவரா? Reviewed by Author on March 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.