முல்லைத்தீவு விவசாயிகளின் புத்தரிசி வழங்கும் நிகழ்வு!
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட புத்தரிசி சேகரிக்கும் விழா நேற்று 22.03.2022 ஒட்டுசுட்டான் கமநல சேவைகள் நிலையத்தில் கமக்கார அமைப்பினர், விவசாயிகள் என பலரின் பங்கு பெற்றலுடன் சிறப்புற இடம்பெற்றது
தனாம் செய்வதில் சிறந்த விவசாயிகளாக முல்லைத்தீவ மாவட்ட விவசாயிகள் காணப்படுகின்றார்கள் பசளைப்பிரச்சினை,யானை அழிவு,போன்ற பல்வேறு அழிவுகளுக்கு மத்தியில் அறுவடையினை செய்த விவசாயிகள் நெல்லினை அரிசியாக்கி ஒரு பகுதியினை புத்தபெருமானுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட கமலநஅபிவிருத்தி உதவி ஆணையாளர் பரணீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி அவர்கள்,மாவட்ட விவசாய பணிப்பாளர் கோகுலதாசன் உள்ளிட்ட பெரும்பாக உத்தியோகத்தர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,பண்ணை முகாமையாளர்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர்கள்,விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் புத்தரிசி காணிக்கையினை வழங்கியுள்ளார்கள்.
முல்லைத்தீவு விவசாயிகளின் புத்தரிசி வழங்கும் நிகழ்வு!
Reviewed by Author
on
March 23, 2022
Rating:
Reviewed by Author
on
March 23, 2022
Rating:












No comments:
Post a Comment