முறிகண்டியில் கோர விபத்து ஒருவர் பலி மூவர் படுகாயம்!!!
குறித்த விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது.
குறித்த விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35வயதுடைய ஜெயராம்-பிரசாத் என்ற இளம் குடும்பத்தர் சம்பவ இடத்தில் உயிரித்துள்ளார்.
இவர்,புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.
படுகாயமடைந்த மூவரும் நோயாளர்காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்தவரின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலையில்,வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான,மேலதிக விசாரணைகளை மாங்குளம்,பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற நேரத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் காயமடைந்தவர்களை,அழைத்து செல்ல நோயாளர் காவுவண்டி வருகை தந்தமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முறிகண்டியில் கோர விபத்து ஒருவர் பலி மூவர் படுகாயம்!!!
Reviewed by Author
on
March 30, 2022
Rating:

No comments:
Post a Comment