அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு கடத்த இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பூச்சி மருந்து க்யூ பிரிவு பொலிஸாரினால் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் போலீசார் அவற்றை சுற்றி வளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கியூ பிரிவு போலீஸ் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் கந்தசாமி,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரி, தலைமை காவலர் ராமர், முதல்நிலைக் காவலர் இருதய ராஜ் குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் இன்று புதன்கிழமை (30) காலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

 அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு வள்ளத்தில் சரக்கு வாகனத்தில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பதை கண்டு அவர்களை சுற்றி வளைக்க முற்பட்ட போது அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். தொடர்ந்து அங்கிருந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்த இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான களைக்கொல்லி பூச்சி மருந்து உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 700 லிட்டர் களைக்கொல்லி பூச்சி மருந்து இருப்பதை கண்ட கியூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய, இருப்பதைக் கண்ட கியூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் வள்ளம் ஆகியவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.







இலங்கைக்கு கடத்த இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பூச்சி மருந்து க்யூ பிரிவு பொலிஸாரினால் பறிமுதல். Reviewed by Author on March 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.