யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான உடன்படிக்கை - இந்தியாவிற்கு கிடைத்த மூலோபாய வெற்றி - ஆய்வாளர்கள் கருத்து
இந்துசமுத்திரத்தின் மீதான செல்வாக்கிற்காக சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான போட்டியில் இந்தியாவிற்கு மூலோபாய வெற்றி என கருதக்கூடிய வகையில் இலங்கையின் வடபகுதியில் கலப்பு மின்சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் இந்தியா இலங்கையுடன் கைச்சாத்திட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளிற்காக கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிசுடன் இணைந்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை பார்வையிட்டார் என இந்திய தூதரகம் தெரிவித்தது.
மூன்றாம்தரப்பின் ஈடுபாடு குறித்த பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இலங்கையின் மூன்று தீவுகளில் மின்சக்தி திட்டத்தை முன்னெடுப்பதை ஒத்திவைப்பதாக டிசம்பரில் சீனா அறிவித்திருந்தது.
புதிய மின்சக்தி திட்டத்தின் அடிப்படையில் அமையவுள்ள மின்நிலையங்கள் சீனா தனது திட்டத்தை முன்னெடுக்கவிருந்த மூன்று தீவுகளில்தான் அமையவுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியாது என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் குறித்த ஏனைய விடயங்கள் இன்னமும் வெளியாகவில்லை.
இந்தியாவின் தென்கிழக்குகரையோரத்தில் பாக்குநீரிணைக்கு அப்பால் உள்ள இலங்கையை இந்தியா தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதியாக கருதுகின்றது.
கிழக்கையும் மேற்கையும் இணைக்கின்ற முக்கியமான கடற்பாதையின் நடுவில் அமைந்துள்ள இலங்கை சீனாவின் சர்வதேச உட்கட்டுமான முயற்சியான புதிய பட்டுப்பாதை திட்டத்திற்கு முக்கியமானது.
இது இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க வெற்றி என தெரிவிக்கலாம் என குறிப்பிட்டார் சிரேஸ்ட பத்திரிகையாளரும் இலங்கையை சேர்ந்த சர்வதேச விவகாரங்களிற்கான ஆய்வாளருமான லைன் ஒக்கேர்ஸ்.
இந்தியாவை பாதிக்ககூடிய விடயங்கள் என வரும்போது இலங்கை மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய நிலையில் இந்தியா காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வடபகுதியில் உள்ள தீவுகளில் மின்திட்டங்களை உருவாக்கும் சீனாவின் முயற்சி வெற்றியளித்திருந்தால் அது இந்தியாவின் தென்பகுதி கரையோரத்திற்கு அருகில் சீனா கால்பதிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கும்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏனைய பகுதிகளில் எல்லை தகராறுகள் காணப்படுகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிலும் கலந்துகொள்கின்றார்.
இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை ஏற்படுத்துவது மீன்பிடி துறைமுகங்களை அமைப்பது தொடர்பான ஒப்பந்தங்களிலும் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை தனது வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மருந்துகள் எரிபொருள் பால்மா உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.மின்சாரம் நாளாந்தம் பல மணிநேரம் வெட்டப்படுகின்றது.
இலங்கை சீனா இந்தியா இரண்டு நாடுகளிடமும் உதவிகளை கோரியுள்ளது,முதலில் எரிபொருள் வழங்குவதற்காக 500 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா பின்னர் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கைக்கு பொருளாதார உதவியாக 2.5 பில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலிக்கின்றது.
சீனாவின் கடன்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இலாபத்தை ஈட்டித்தராத உட்கட்டுமான திட்டங்களே இலங்கையின் கடன்நெருக்கடிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் அந்நியசெலாவணி கையிருப்பு வேகமாக குறைவடைந்துவருகி;ன்றது ஆனால் இலங்கை இந்த வருடம் 7 பில்லியன் டொலர்களை கடனை செலுத்தவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான உடன்படிக்கை - இந்தியாவிற்கு கிடைத்த மூலோபாய வெற்றி - ஆய்வாளர்கள் கருத்து
Reviewed by Author
on
March 29, 2022
Rating:

No comments:
Post a Comment