தலைமன்னார் நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் இராணுவத்தினரால் மீட்பு.
இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது ஒரு தொகுதி மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டது.
சோதனையின் போது குறித்த மாத்திரைகள் உடல் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் என தெரிய வந்துள்ளதோடு, குறித்த இரு பெட்டிகளில் இருந்து 60 ஆயிரம் மாத்திரைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட மாத்திரைகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னார் நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் இராணுவத்தினரால் மீட்பு.
Reviewed by Author
on
March 03, 2022
Rating:
No comments:
Post a Comment