மன்னாரில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போசாக்கு உலர் உணவு பொதியில் தரமற்ற அரிசி விநியோகம்.
குறித்த 2 ஆயிரம் ரூபாய் பொதியில் 6 கிலோ அரிசி,1/2 கிலோ பருப்பு,1/2 கிலோ கடலை மற்றும் 1 மீன் டின் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றது.
எனினும் குறித்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட அரிசி தரமற்றதாக காணப்படுவதோடு, மன்னார் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் சுகாதாரமற்ற முறையில் அரிசி களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
-குறித்த அரிசி பயன்படுத்த முடியாத அளவில் வண்டுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முறையிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ஐ வினவிய போது,,,
மன்னார் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போசாக்கு உலர் உணவு பொதியில் வழங்கப்பட்ட அரிசி தொடர்பாக முறைப்பாடு முன் வைக்கப்பட்டது.
முறைப்பாட்டிற்கு அமைவாக பொது சுகாதார பரிசோதகர்கள் சென்று களஞ்சியசாலையை பார்வையிட்டனர்.
இதன் போது மக்களுக்கு வினியோகிக்க கூடிய வகையில் அங்கு அரிசி களஞ்சியப்படுத்தாமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி விநியோகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட போசாக்கு உலர் உணவு பொதியில் தரமற்ற அரிசி விநியோகம்.
Reviewed by Author
on
March 28, 2022
Rating:

No comments:
Post a Comment