முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற வணிக மற்றும் வங்கி தொடர்பான நடமாடும் சேவை!
இதனூடாக புதிய வியாபாரங்களை ஆரம்பிக்க தேவையான ஆலோசனைகள், உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கான வழிகாட்டல்கள், தொழில்முயற்சியாளர்களுக்கு வங்கி கடன் இணைப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், வியாபார பதிவு தொடர்பான ஆலோசனைகள், சந்தை வாய்ப்பு மற்றும் NVQ சான்றிதழ் பெற்றுக்கொள்ள வழிகாட்டல்கள், தொழில்நுட்ப பயிற்சிக்கான ஆலோசனைகள் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.
குறித்த நடமாடும் சேவையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், சமுர்த்தி திணைக்கள வங்கிகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை , மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தொழில் திணைக்களம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, விதாதா,NAITA, VTA , அரச, அரச சார்பற்ற வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற வணிக மற்றும் வங்கி தொடர்பான நடமாடும் சேவை!
Reviewed by Author
on
March 24, 2022
Rating:

No comments:
Post a Comment