சிங்கள தேசமும் சிங்கள மக்களும் இன்று எமது தலைவரை தேடுகின்றறார்கள்-இ.கதிர்!
தமிழினம் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.எமது விடுதலைப்போராட்டம் அதி உச்ச வெற்றியினை பெற்று தமிழர்களுக்கான தனிதேசத்தினை அமைப்பதற்கான வழியில் பயணித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் அரசாங்கங்கள் பேச்சு வார்த்தைகள் என்ற விடையத்திற்குள் வந்து பேச்சுவார்தைகள் மூலம் இனவிடுதலை உணர்வினை சிதைப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தார்கள்.
அந்த முயற்சிகள் நாம்ஆயுதரீதியாக பலமாக இருந்த காலங்களில் இலங்கை அரசிற்கு வெற்றிகளை கொடுக்கவில்லை அரசியல் ரீதியாக போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் பலவீனமாக காணப்பட்ட ஒரு சூழலில் இந்த அரசாங்கம் ஆட்சி பீடத்தில் ஏறியது
20 ஆண்டுகள் எம்மை அசைக்கமுடியாது என மார்பு தட்டிக்கொண்டு சிங்கள பெரும்தேசியவாதத்தின் வாக்குளால் வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறிய அரசு தற்போது அதே மக்களால் புறக்கணிக்கப்பட்டு மிகமோசமாக பலவீனம் அடைந்த நிலையில் இன்று தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்தேசியக்கூட்டமைப்பினை பேச்சுக்கு அழைத்துள்ளார்கள்
இந்த பேச்சு என்பது உண்மையில் நாங்கள் மிகவும் இராஜதந்திரரீதியில் சிந்தித்து செயல்படவேண்டி பேச்சுவார்தையாகத்தான் அமைந்துள்ளது இலங்கை அரசு மிகவும் நிதானமாக திட்டமிட்டு நகர்கின்றது.
எந்த திட்டத்தில் என்னஅடிப்படையில் இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் தரப்பு கலந்துகொள்வது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.
பன்நாட்டு சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து மீள்வதற்காகவும் நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகமாக இருக்கின்ற சிங்கள மக்களின் எதிர்ப்புக்களில் இருந்து தப்பிக்கொண்டு தொடர்ந்தும் தங்கள் ஆட்சிகளை தக்கவைத்துக்கொள்வதற்காக தமிழர்களை ஒருதரப்பாக அங்கிகரிக்கின்றோம் என்ற பொய்யான மயையினை காட்டி அரசாங்கம் பேச்சுக்களில் ஈடுபட்டு தன்னை தப்பிக்கொள்வதற்கு முயற்சி செய்கின்றது என்பதுதான் உண்மையான விடையமாக இருக்கின்றது.
இதில் நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்கள் ஒன்ற பட்டசக்தியாக பலமான ஒரு சக்தியாக கிளர்ந்தெழுந்து தமிழ்தேசியகத்தின் விடுதலைக்காக முற்படுகின்ற காலகட்டத்தில் எல்லாம் பேச்சு வார்த்தைகள் என்பது இங்கு நடைபெற்றிருக்கின்றது. பேச்சுவார்தைகள் மூலம் காலத்தினை இழுத்தடித்து இறுதியில் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு எதுவும் இல்லாமல் கைவிரிக்கப்பட்ட நிலையில் மக்கள் அடிமைகளாக வாழ்கின்ற சூழல்தான் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையினை எமது உண்மையான தமிழ் அரசியல் தலைவர்கள் சிந்தித்து செயல்படவேண்டும் மக்கள் உங்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ததற்கு மக்களுக்கு நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கNவுண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.
இதேபோன்று தமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்பது 30 ஆண்டு ஆயுதப்போராட்டம் இன்று ஜனநாயகரீதியான போராட்டம் என்பதை எம்மை எதிகளாக பார்த்த சிங்கள தேசம் சிங்கள மக்கள் இன்று அதற்கான அங்கிகாரத்தினை வழங்குகின்ற சூழல் உருவாகிக்கொண்டிருக்கின்றது.
எமது தலைவரை தேடுகின்றார்கள் இலங்கை நாட்டில்சிறந்த ஆட்சியாளன் என்ற மதிப்பையும் தலைவருக்கு கொடுக்கின்றார்கள். பலஇராணுவத்தினர் சிங்கள மக்கள் அரசியல் தலைவர்கள் பலர் இன்று விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் ஒரு ஜனநாயகரீதியான போராட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இங்கு உருவாகிஇருக்கின்றது.
பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் நாங்கள் கையெழுத்து போராட்டம் நடத்தியிருந்தோம் அதற்கும் நாடுதழுவிய ஆதரவு எங்களுக்கு கிடைத்தது தியாகதீபம் திலீபன் அவர்களின் சிந்தனை கருத்துக்கள் தொடர்பாக தென்னிலங்கையில் இருக்கின்ற அமைச்சர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்துகின்ற நிலை உருவாகிஇருக்கின்றது.
பயங்கரவாத தடுப்பு சட்டம் ஊடகா இலங்கை நாட்டின் நிலமை எவ்வாறு செல்லும் என்று தெளிவாக திலீபன் அவர்கள் அன்று கூறியுள்ளார்.
தமிழர்களின் உண்மையான பல விடையங்களை ஏற்றுக்கொண்டு தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக அங்கிகரிக்கக்கூடிய ஒரு சூழல் சிங்கள மக்களுக்குள் உருவாகியுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக தமிழர்களை சிங்களமக்களின் எதிரிகளாக சித்தரித்து விடுதலை இயக்கத்தினை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து எம்மை அடக்குவதற்கு பல முயற்சிகள் எடுத்து அதில்வெற்றி பெற்றார்கள்.
அந்த வெற்றிகளின் ஊடாகத்தான் இன்று றாஜபக்ச குடும்பம் ஆட்சி அதிகரத்தில் ஏறி நிக்கின்றது
இந்த நிலமை சற்று மாறுவதற்கான வாய்ப்புக்கள் இங்கு உருவாகியுள்ளது.
சிங்கள பெரும் தேசியவாதத்தின் இறுமாப்புடன் ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் கூட நகரமுடியாத நிலைக்குள் வரலாறு காணாதா சம்பவங்கள் பாரிய எதிர்ப்புக்கள் இந்த நாட்டில் நிகழ்ந்தேறிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலமையில் எமக்கு சாதகமான பல விடையங்கள் இருக்கின்றன இதனை எவ்வாறு கையாளப்போகின்றோம் இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்ளின் நிதிகளை நாட்டிற்கு கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தினை பாதுகாப்பதற்காக முயற்சி செய்கின்றார்கள்.
இவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் நிதிகளை கொண்டுவந்து வேலைசெய்வதற்கு என்ன உத்தரவாதம் அதற்கான பாதுகாப்பு என்ன இருக்கின்றது ஜனாதிபதி அதற்கான பாதுகாப்பு இருக்கு என்று சொல்வார் அதில் உண்மையில்லை இதேபோல் பல ஜனாதிபதிகள் பல வாக்குறுதிகளை தந்துள்ளார்கள்.
இந்த காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் மிக நிதானமாக செயற்படவேண்டும் எங்கள் மக்களின் அடிப்படை அபிலாசைகள் தொடர்பிலும் அதிகாரங்கள்,மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் அந்த நிலமைகளை உருவாக்குவதன் பின்னர்தான் புலம்பெயர் நிதிகளை கொண்டுவந்து போடமுடியும்.
இதனைவிடுத்து இலங்கை அரசிற்கு முண்டுகொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது என்பது எங்கள் மக்களுக்கு செய்கின்ற துரோகத்தனமாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
புலம்பெயர் நாடுகளில் வாழும் எங்கள் மக்களும் மிகத்தெளிவாக ஒன்றினை புரிந்துகொள்ளவேண்டும் இலங்கையில் உங்கள் முதலீடுகளை கொண்டுவந்து போடுவதற்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களும் இல்லை இங்கு இருக்கின்ற கிராமசேவையாளர் பிரதேச செயலாளர் மாவட்ட செயலாளர் யாருக்கும் சுயமாக செயற்படக்கூடிய அதிகாரம் இல்லை எல்லாம் மத்திய அரசின் கைகளிலும்இராணுவத்தின் கைகளிலும் இருக்கின்றது.
எங்கள் அதிகாரங்களை நாங்கள் பெற்றுக்கொள்ளும்வரைக்கும் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்வது நல்லதல்ல என்பதை வினயமாக கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து என்னத்தினை பெற்றுக்கொள்ளப்போகின்றுறோம் என்பதுதான் முக்கியமான விடையம் அதனைவிட்டு நாங்கள் அரசிற்கு முண்டுகொடுக்கும் வேலையினை செய்யக்கூடாது என்றும் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
சிங்கள தேசமும் சிங்கள மக்களும் இன்று எமது தலைவரை தேடுகின்றறார்கள்-இ.கதிர்!
Reviewed by Author
on
March 30, 2022
Rating:

No comments:
Post a Comment