அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் வாங்க சென்றவர் கொலை செய்யப்பட்டார்

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (20) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் வாங்குவதற்காக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

 தாக்குதலுக்கு இலக்கானவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொழும்பு 14 இல் வசிக்கும் 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை செய்த நபரை கைது செய்ய நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் வாங்க சென்றவர் கொலை செய்யப்பட்டார் Reviewed by Author on March 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.