மன்னாரில் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த முயற்சிகளின் விரிவாக்கமாக, வட மத்திய கடற்படைக் கட்டளையில் உள்ள SLNS கஜபா மற்றும் SLNS தம்மன்னா ஆகியன கடலோர ரோந்துக் கப்பல் P 148 மற்றும் சிறப்புப் படகுப் படையின் சிறிய படகுகளை நிலைநிறுத்தி இந்த சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. அதன்படி, இன்று ஒலுதுடுவையில் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்து சுமார் 175 கிலோ கேரள கஞ்சா (ஈரமான எடையில்) மீட்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 06 கன்னி சாக்குகளில் இந்த சரக்கு அடைக்கப்பட்டிருந்தது. இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் 02 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என நம்பப்படுகிறது.
தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுக்க, கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 34 வயதுடைய வான்கலைபாடு உதயபுரத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்
மன்னாரில் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Reviewed by Author
on
March 19, 2022
Rating:
No comments:
Post a Comment