மன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் -பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருட்கள் எரிவாயு தட்டுப்பாடு , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்தல், பொது மக்களுக்குச் சொந்தமான காணியை இராணுவம் அபகரிப்பு தொடர்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 'கோட்டபாயவே வெளியேறு',குடும்ப ஆட்சி வேண்டாம்','மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே கொடு' போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியதோடு, பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் உறவுகள், இளைஞர் யுவதிகள் ,சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் -பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு.
Reviewed by Author
on
April 08, 2022
Rating:

No comments:
Post a Comment