அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு உத்தரவால் முடங்கியது முல்லைத்தீவு ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊரடங்கு உத்தரவால் முடங்கியது முல்லைத்தீவு ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு நேற்று மாலை 06 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து நகரங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு நகரங்களில் வீதிகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 

 மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் வற்றாப்பளை சந்தியில் உள்ள வீதி தடையில் வீதியால் செல்லும் அனைவரும் காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினரால் துருவித்துருவி விசாரணை செய்யப்பட்டு வருவதோடு அவர்களை பதிவு செய்வதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதேவேளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீதி தடைகளில் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதோடு அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது இதேவேளை நேற்று மாலை திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மரக்கறி வியாபாரிகள் ,பழக்கடை உயிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாரிய நட்டங்களை எதிர்கொண்டுள்ளனர்











ஊரடங்கு உத்தரவால் முடங்கியது முல்லைத்தீவு ! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Reviewed by Author on April 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.