வவுனிக்குளம் சிறுபோக பயிர்ச்செய்கைக் கூட்டம் !
இந்த வருடம் வவுனிக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கைக்காக 2142 ஏக்கர் இடதுகரையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் விநாயகர்புரம் 700 ஏக்கர், பொன்னகர் 44 ஏக்கர், பூவரசங்குளம் 650 ஏக்கர், கரும்புள்ளியான் 270 ஏக்கர், பாண்டியன்குளம் 478 ஏக்கர் செய்கை பண்ணப்படவுள்ளது.
மேலும் வயற் செய்கைக்கான நீர் பங்கு விநியோகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதனைவிட முக்கிய தீர்மானமாக இனி வருங் காலங்களில் கண்டமுறையிலும் வாய்க்கால்கள் அடிப்படையிலும் சிறுபோகம் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், கமநல காப்புறுதி சபையின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் உத்தியோகத்தர், மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட வனத்துறை உத்தியோகத்தர், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனிக்குளம் சிறுபோக பயிர்ச்செய்கைக் கூட்டம் !
Reviewed by Author
on
April 07, 2022
Rating:

No comments:
Post a Comment