கடனுக்கான உறுதிப்பாட்டை கோரியது சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு கடன் உதவி வழங்க முன்வந்துள்ள சர்வதேச நாணய நிதியம், கடனுக்கான உறுதிப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையில் கடனை மீளச் செலுத்துவதற்கான இயலுமையையும் ஸ்திர நிலைமையையும் கொண்டுவருவதற்கு முடியுமென்ற உறுதிப்பாடு அவசியமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பிரதிநிதிகளுடன் கடன் வழங்குவதற்கான மாற்றுத் திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பில் கலந்துரையாடியதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி கூறியதாக சர்வதேச செய்தி முகமை ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மிக விரைவில் நிலையான முன்னேற்றப் பாதையைநோக்கி கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அடைந்துள்ள துயரங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதன்போது கவலை தெரிவித்துள்ளது.
உடனடி நிதித் தேவையை நிவர்த்தி செய்வதற்காக கடனை மீளச் செலுத்துவதற்கான இயலுமையை ஆராய வேண்டுமெனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடனுக்கான உறுதிப்பாட்டை கோரியது சர்வதேச நாணய நிதியம்
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
.jpg)

No comments:
Post a Comment