நிறைவேற்று அதிகாரத்தினை மீளாய்வு செய்வதற்கு தயார் என்கின்றார் ஜனாதிபதி
அதிஉயர் அரசமைப்பை மதிக்கும் அதேவேளை – எதிர்காலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய தேவையேற்பட்டால் - நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கவேண்டிய தேவையேற்பட்டால் நான் தியாகங்களை செய்வதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறைவடைந்துவரும் அந்நியசெலாவணி கையிருப்பு அதிகரித்த பணம் வீக்கம் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் கடன்களை திருப்பி செலுத்துவதற்கும் இலங்கை 4 பில்லியன் டொலர் கடன் உதவியை கோரிநிற்கின்றது.
இந்த நெருக்கடிகள் அரசியல் அமைதியின்மையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்துள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என அதிகரித்து வரும் ஆர்;ப்பாட்டங்களை எதிர்கொள்கின்றார்.
தனது உரையில் சர்வதேசநாணநிதியத்தின் உதவியை நாடுவதை தாமதித்திருக்ககூடாது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி ஆராவாரம் எதுவுமின்றி அரசாங்கம் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு செல்லும் நிலையை உருவாக்கியதன் மூலம் உரஇறக்குமதிக்காக செலவிடப்படக்கூடிய மில்லியன் கணக்காண ரூபாய்களை சேமித்தமை குறித்தும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முன்னதாகவே சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடியிருக்கவேண்டும் என அமைச்சர்களிற்கு ஜனாதிபதி தெரிவித்தார் என அவரது உரையின் பிரதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிற்கு இரசாயன உரங்களை வழங்காதது தவறான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் உரை அவரது நீண்டபிடிவாதம் தளர்ந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் புதுவருட வாழ்த்துக்களை மக்களிற்கு தெரிவித்தவேளை அவர் ஐக்கியத்தையும் சிறந்த புரிந்துணர்வையும் கோரியிருந்தார்.
திங்கட்கிழமை 17 பேர் கொண்ட அமைச்சரவையின் பதவி பிரமாணத்திற்கு அவர் தலைமை தாங்கினார்,அவரது சகோதரர் தொடர்ந்தும் பிரதமராக பதவியில் நீடிக்கின்ற அதேவேளை – கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவரது சகோதரர்களான இரு ராஜபக்சக்கள் உட்பட ஏனைய ராஜபக்சாக்களிற்கு புதிய அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
ராஜபக்சாக்கள் அனைவரையும் அமைச்சரவையிலிருந்து விலகுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது அதில் பிரதமர் அரசியலமைப்பு மாற்றங்களை அமைச்சரவையில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றுத்துறை சட்டவாக்கம் நீதித்துறை தொடர்பானதாக அது காணப்படும்.
பொதுமக்களின் நோக்கங்களை நிறைவேற்றும் என பிரதமர் கருதும் இந்த திருத்தங்கள் புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதியின் மிகவும் பரந்துபட்ட அதிகாரங்களை குறைக்கவேண்டும் என எதிர்கட்சியினரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அரசியல் குற்றவியல் பிரேரணையையும் கொண்டுவர தீர்மானித்துள்ளது.
கோத்தபாயவின் சகாக்களும் எதிர்கட்சிகளும் அவரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்-அரசமைப்பு மாற்றங்கள் மூலம்; ஜனாதிபதிக்கான முழுமையான அதிகாரங்களை நீக்கவேண்டு;ம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு சட்டவாக்க அதிகாரமும் உள்ளது பல அரசியல் தரப்புகள் அரசமைப்பு மாற்றம் குறித்து அறிக்கைகளை வெளியிடுகின்றன
நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்து நிறைவேற்றுவதற்கான வாய்ப்புள்ளது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தான் பதவிவிலகவேண்டும் என்ற வேண்டுகோள்களும் கோரிக்கைகளும் அதிகரிக்கின்ற நிலையில் ஏன் தான் தொடர்ந்தும் பதவியில் இருக்கவேண்டும் என்பதையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவாலக்களை வெற்றிகொள்வதற்கு நேசநாடுகளினதும் சர்வதேச நாணயநிதியத்தினதும் ஆதரவு அவசியம், அதற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம் என அவர் புதிய அமைச்சரவைக்கு தெரிவித்தார்.
தினக்குரல்
நிறைவேற்று அதிகாரத்தினை மீளாய்வு செய்வதற்கு தயார் என்கின்றார் ஜனாதிபதி
Reviewed by Author
on
April 19, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment