அண்மைய செய்திகள்

recent
-

யாழ். குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் உயிர் வாழ முடியாத இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் . இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த புதுக்குடி கடற்கரையில் இலங்கையில் இருந்து படகு மூலம் இரண்டு பேர் வந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மரைன் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன், மற்றும் அருள்ராஜ் என இருவர் அகதிகளாக வந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மரைன் போலீசார் தொண்டி மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

 அவர்களிடம் உடைமைகள் எதுவும் இல்லாததால் இவர்கள் அகதிகளாக வந்தார்களா அல்லது வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் இன்று வரை 77 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




யாழ். குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்! Reviewed by Author on April 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.