தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு
காலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது உயிரிழந்த சிறுவன் தனது பாட்டியிடம் தீப்பெட்டி ஒன்றை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றதன் பின்னரே தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்த போதிலும், சிறுவன் படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல நாட்களாக வீட்டின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்த பெற்றோல் காரணமாக உடனடியாக தீப்பரவியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஹெம்மாதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.
.
தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு
Reviewed by Author
on
April 04, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment