ரம்புக்கனை சம்பவம்: B அறிக்கையிலுள்ள விடயங்களை மாற்றியமைக்காக மன்றில் மன்னிப்பு கோரிய உயர் பொலிஸ் அதிகாரி
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது AR அறிக்கையொன்றினூடாக பொலிஸார் தமது தரப்பு விடயங்களை நீதவானிடம் முன்னிலைப்படுத்திய நிலையில், மனித கொலை தொடர்பில் AR அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, B அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதவானால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
B அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதவான், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்தார்.
இதன்போது சம்பவம் தொடர்பில் 3 சாட்சியாளர்கள் நீதவானிடம் சாட்சியமளித்துள்ளனர்.
இதன்போது சாட்சியம் வழங்கிய ஒருவருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சட்டத்தரணியூடாக அவர் நீதவானுக்கு மீண்டும் அதே இடத்தில் அறியப்படுத்தியுள்ளார்.
எந்த சாட்சியாளர்களையும் அச்சுறுத்தக்கூடாது என இதன்போது பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை மன்றில் முன்னிலையாகுமாறு சம்பவ இடத்திலேயே நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைய, சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கு சென்ற நீதவான், துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர்களையும் சந்தித்தார்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு(20) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று(21) நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ரம்புக்கனை சம்பவம்: B அறிக்கையிலுள்ள விடயங்களை மாற்றியமைக்காக மன்றில் மன்னிப்பு கோரிய உயர் பொலிஸ் அதிகாரி
Reviewed by Author
on
April 21, 2022
Rating:
Reviewed by Author
on
April 21, 2022
Rating:


No comments:
Post a Comment