பாதுகாப்பு படையினருக்கு நினைத்ததை செய்யும் அதிகாரத்தை வழங்கினார் ஜனாதிபதி –
பொதுஒழுங்கினை பேணுவதற்காகவும் சமூகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை வழங்குவதற்காகவும் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி பிரகடனம் தெரிவித்துள்ளது.
22 மில்லியன் மக்களை கொண்ட நாடு பொருட்களிற்கு கடும் தட்டுப்பாடு கடும் விலை அதிகரிப்பு நீண்டநேர மின்வெட்டு போன்றவற்றை எதிர்கொள்கின்றது -.
பொலிஸார் கொழும்பு உட்பட மேல்மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவினை அறிவித்தனர்.
முன்னதாக நேற்று மாலை மனித உரிமை பணியாளர்கள் கைகளால் எழுதப்பட்ட பதாகைகள் விளக்குகளை கைகளில் ஏந்தியபடி நகரின் முக்கியமான பகுதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ராஜபக்சாக்கள் பதவி விலகவேண்டிய நேரம்,இதற்கு மேலும் ஊழல் இல்லை கோத்தா வீட்டிற்கு போ-( ஜனாதிபதியை குறிப்பது) போன்ற பதாகைகள் காணப்பட்டன
நுவரேலியாவில் பிரதமரின் பாரியார் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துநிறுத்தினர்.
தென்பகுதி நகரங்களான காலி மாத்தறை மொரட்டுவை போன்ற பகுதிகளிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன,வடபகுதி மத்திய பகுதியிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன - இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினருக்கு நினைத்ததை செய்யும் அதிகாரத்தை வழங்கினார் ஜனாதிபதி –
Reviewed by Author
on
April 02, 2022
Rating:

No comments:
Post a Comment