மன்னாரில் இடர் கால நிவாரண உதவி திட்டத்தை அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார்-
இந்த நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக 1200 குடும்பங்கள் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இடர் கால நிவாரண உதவியாக சுமார் 3500 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைவாக இன்றைய தினம் ஆரம்ப நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் ,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி மற்றும் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ மற்றும் குறித்த நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தனர்.
இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 100 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இடர் கால நிவாரண உதவி திட்டத்தை அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார்-
Reviewed by Author
on
April 09, 2022
Rating:

No comments:
Post a Comment